நண்பனே...
சாலையில் வேகம் கட்டாமல்
விவேகமாய் இருக்கவேண்டும்.. ஆனால்
வேலையில் வேகம் கட்டாமல்
காலத்தை கடத்தி விடுகிறாய்.. இளைஞனே
விருப்பம் போல் விடலை பருவத்தில்
சுற்றித்திறிய வேண்டும்.. ஆனால்
பொருப்பு உன்னைச் சுற்றிக்கொண்ட பின்னும் - நீ
மருப்பு தெறிவித்து சும்மா இருந்துவிடுகிறாய்.
மனிதனே.. கடமையை சரிவரச்
செய்துவிட்டு காத்திருக்க வேண்டும்.. ஆனால்
நல்லகாலம் வருமென்று காத்திருந்தே
கல்லறைக்குள் சரண் புகுந்துவிடுகிராய்.. மனிதா
நீ ஏணிப்படியில் ஏறுவதாய் நினைத்துக்
கொண்டு வழுக்குப்பாறையில் ஏறிக்கொண்டிருக்கிறாய்.
வாழ்க்கைப் பயணம் உணக்காக மட்டுமே
தரப்பட்டது - அதில் வழிதவறிவிடாதே...
-ச. ஷாரங்கன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment