Monday, 25 February 2008

தமிழ்

சங்கத்திற்கு முன் தோன்றி இன்றும்
கண்ணியாய் காட்சியளிக்கின்றாய்.. உன்
இளமை அமுதை குடித்ததால்தான்
பாரதி, பாரதிதாசன், திருவள்ளுவர்
போன்றோர் இன்றும் நம்முள் இளமையாய் இருக்கின்றனர்.
உலகம் உள்ளவரை இளமை மாறாதது. இறவாத
புகழுடையவளே மாதொரு பாகன் சூடிய சுடராய்
எளியோர்க்கும் விளங்கிடும் சொற்களை உடலாய்
தித்திக்கும் தேன் போல இனித்திடும் கருத்தாய்
உலகத்து மக்களுள் உயர்ந்தவராக்க வந்த
தமிழென்னும் அமுதானவளே.. பசியால் வாடிடும்
பிள்ளைகளுக்கெல்லாம் தன்னையே வருத்தி
உணவளிக்கும் தாய் போல் எம் இனம் வாடியபோதெல்லாம்
உன்னையே தந்ததால் நாங்களும் நாளை
வருவோரும் உன்னையே வாழ்த்துவோம். மகளிர்க்கு
ஏழ்பருவம் எனப் பிரித்தளித்து குழந்தையாய்,
கண்ணியாய், தாயாய் தினமிருந்து இனிவரும்
சமுதாயம் சிறப்புடன் இருக்க ஒளடதம் கொண்டுவரும்
மூதாட்டியை போற்றுவோம். காலங்கள் மாறலாம்,
கோலங்கள் மாறலாம் பழையன பல கழித்து புதியன
புகும் வேளை மண்ணுக்குள் மாறாத வைரமாய்
பிறப்பெடுப்பாய். அவ்வேளை சமுதாயம் உன்னைப் போற்றிட
உன் துணையால் உன்னைக்கொண்டு புது நூல்கல்
பல கண்போம். அப்போதும் எங்களின் எண்ணமாய் நீ
உண்டு என்றென்றும் மாறிடா உன்னைப் போற்றியே
நாளும் இம்மண்ணில் நல்லோரை வாழவைத்து நாங்கள்
வாழ்வதோடு நீயும் வாழ்ந்திட என்றென்றும் வாழ்த்துவோம்...

-ச. ஷாரங்கன்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in